மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் அருகே இறந்தநிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

வேதாரண்யம் அருகே இறந்தநிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

தினத்தந்தி

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் டால்பின்கள் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடியக்கரை கடலுக்கு டால்பின்களின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் டால்பின்களை வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

இந்த டால்பின்கள் படகில் அடிபட்டும், மீனவர்களின் வலையில் சிக்கியும் இறந்து கரை ஒதுங்குகின்றன.

இந்தநிலையில் நேற்று வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் 4 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. இதனை கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் எடுத்து சென்று புதைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை