மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்கிய கும்பல்

காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்தி மர்ம கும்பல் தாக்கியது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

கோவை,

கிருஷ்ணகிரி மாவட்டம் சித்திரகள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த ரக்ஷா(வயது20) என்ற இளம்பெண் ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர் கள் 2 பேரும் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் கள் திருமணம் செய்து கொண்டு கோவை வந்து நண்பர்கள் உதவியுடன் சுங்கம் இந்திரா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தினர். மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று, காரில் வந்த ஒரு மர்ம கும்பல் கோ வை ராமநாதபுரம் அருகே மணிகண்டனை வழிமறித்து கடத்தி சென்றனர். அப்போது அவரை அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். இதை யடுத்து கார் புளியம்பட்டி அருகே சென்ற போது மணிகண்டன் காரில் இருந்து கீழே குதித்து தப்பினார். கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த மணிகண்டன் புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். உடனே அந்த போலீசார், கோவை ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மணிகண்டனை மீட்டு கோவை அழைத்து வந்து விசாரித்தனர். காதலுக்கு ரக்ஷாவின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது நண்பர்கள் 3 பேர்தான் காரில் வந்து தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை