மாவட்ட செய்திகள்

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம்: பரமத்திவேலூர் தாசில்தார் இடமாற்றம்: கலெக்டர் மெகராஜ் உத்தரவு

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம் தொடர்பாக, பரமத்திவேலூர் தாசில்தாரை இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வங்கிகளை மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசின் உத்தரவை மீறி அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்படுவதாக வந்த தகவலின் பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று நேற்று முன்தினம் ஊழியர்களை உள்ளே வைத்தே சீல் வைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார். அவர் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுந்தரவள்ளி பரமத்திவேலூர் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து