மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி 157 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 93 ஆயிரத்து 892 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 பேருக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், பி.எம்.நரசிம்மன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட கலெக்டர் ஊட்டசத்து விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு