மாவட்ட செய்திகள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகள் தயாரித்த செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகள் தயாரித்த செயற்கைக்கோள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பொறியியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் படிக்கும் 15 மாணவிகள் சேர்ந்து எஸ்.கே.அய். என்.எஸ்.எல்.வி.9 மணியம்மையார் சாட் என்ற செயற்கைக்கோளை தயாரித்து உள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மைதானத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ மையத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்கிறார்.

செயற்கைக்கோள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியதாவது:-

ஆசியாவிலேயே மாணவிகள் தயாரித்த முதல் செயற்கைக்கோள் இது தான். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பல்வேறு பிரிவுகளில் படிக்கும் 15 மாணவிகள் கூட்டாக சேர்ந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, கூட்டு முயற்சியுடன் செயற்கைக்கோளை தயாரித்து உள்ளனர். ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டின் பெருமைக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த செயற்கைக்கோளுக்கு மணியம்மையார் சாட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளானது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன் வான்வெளிக்கு 70 ஆயிரம் அடி வரை சென்று அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்று வட்டத்துக்குள் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கி மேலே செல்லும் போது வளிமண்டலத்தின் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்து கண்டறியப்பட உள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதை பார்க்க அனைவருக்கும் அனுமதி இலவசம். இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து