மாவட்ட செய்திகள்

2¼ லட்சம் மாணவ- மாணவிகளுக்கு பாடபுத்தகம் பள்ளிகள் திறந்ததும் வழங்கப்பட்டது

வேலூர் மாவட்டத்தில் நேற்று 2¼ லட்சம் மாணவ- மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

வேலூர்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பருவமுறை தேர்வு நடத்தப்படுவதால் பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கும்போது 2-ம் பருவ பாடபுத்தகங்களும், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறந்ததும் 3-ம் பருவ பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 2,100 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளிகள் திறந்ததும் பாடபுத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவின்பேரில், முதல் நாளான நேற்றே 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்