ஜோலார்பேட்டை,
திருப்பதியிலிந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் பெட்டி மீது ஏறினார்.
அவர் ரெயில் பெட்டிக்கு மேலே இருந்த உயர்அழுத்த மின்கம்பியை பிடித்துள்ளார். அடுத்த வினாடியே அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு உடலின் தோல் சிதைந்த நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த பயணிகள் உதவியுடன் வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இறந்வர் ஒடிசா ஒரிசா மாநிலம் குல்லார் மாவட்டம பூவானிபட்னாவை சேர்ந்த ராகுல் நிக்கான் என்பவரின் மகன் அன்காந்த் நிகான் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக ரெயில் பட்டியில் ஏறி உயர்அழுத்த மின்கம்பிய பிடித்தார், தற்காலை செய்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை.
இது குறித்து இறந்த வாலிபரின் உறவினருக்கு தெரிவித்து வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.