மாவட்ட செய்திகள்

ரூ.40 லட்சத்தில் புதியபாலம் கட்டும்பணி தொடக்கம் ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே உள்ள பழைய பாலத்தை இடித்து புதியபாலம் கட்டுவதற்கானப் பணிகள் நடைபெறுவதால் ஆற்காடு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர்-ஆற்காடு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவே காணப்படும். சி.எம்.சி பகுதியில் வாகனங்கள் செல்ல மேம்பாலமோ அல்லது பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதையோ இல்லாததால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரி பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

இந்த நிலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஒரு சாக்கடை கால்வாயின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறியபாலம் பழுதடைந்து இருந்தது. போக்குவரத்து மிகுந்த சாலையில் இந்தப் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதாலும், பாலம் பழுதடைந்து இருந்ததாலும் அந்தப் பாலத்தை இடித்து விட்டும், சாலையை விரிவாக்கம் செய்தும் புதிய பாலத்தை கட்டுவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்டுவதற்கானப் பணி நேற்று தொடங்கியது. இந்தப் பணியை 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், வேலூர்- ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் இருந்து ஆற்காடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழைய பைபாஸ், கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல வேண்டும். ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை சி.எம்.சி. வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

அதேபோன்று சத்துவாச்சாரியில் இருந்து பழைய பஸ்நிலையத்திற்கு வரும் வாகனங்கள் கிரவுன் தியேட்டர் வரை அனுமதிக்கப்படும். பழைய பஸ்நிலையத்திற்கு செல்லும் ஆட்டோக்கள் முருகன் கோவிலில் இருந்து சைதாப்பேட்டை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து மாற்றம் குறித்து சி.எம்.சி. ஆஸ்பத்திரி, கிரவுன் தியேட்டர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து