நெல்லை,
யாதவர் பண்பாட்டு கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தென்மண்டல யாதவர் முன்னேற்ற சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஸ்டேட் வங்கி முன்னாள் இயக்குனர் வானமாமலை, தங்கசாமி, ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார். பொருளாளர் பாபநாசம் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவமாணவிகளுக்கு முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசு வழங்கி பேசினார். மாணவமாணவிகள் எப்படி உயர்கல்வி கற்க வேண்டும் என்று ஆசிரியர் காந்திமதி, நல்லாசிரியர் நடராஜன், நூலகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்...
தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வரும் கலெக்டர் சந்தீப்நந்தூரிக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.