மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நேற்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 90 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 72 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை