திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேணுகோபாலபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 59). விவசாயி. இவரது வீட்டில் 5 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் முனுசாமி (36) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் கிரிபாபு (38) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை போன்றவற்றை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். முனுசாமி, கிரிபாபு ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
வேணுகோபாலபுரம் ஊராட்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து தெருவில் உள்ள 3 வீடுகளில் தொடர் கொள்ளை குறித்து திருவலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.