மாவட்ட செய்திகள்

தேனீ.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்

தேனீ.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி மங்கலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடினர்.

தினத்தந்தி

வில்லியனூர்,

புதுவை மாநிலம் மங்கலம் தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு நேற்று பிறந்தநாள்.

இதையொட்டி வில்லியனூர், மங்கலம் தொகுதிகளில் தேனீ.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரை வாழ்த்தி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் பேனர்கள் வைத்திருந்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

வில்லியனூர் மாவட்ட அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை யில் தேனீ.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தங்கராசு, மோகன்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மங்கலம் தொகுதி கீழ்அக்ரகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் செந்தில்குமார், செல்வம், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோட்டைமேடு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் சங்கர், பிரகாஷ், கார்த்தி ஆகியோர் தலைமையிலும், சிவராந்தகத்தில் பழனிநாதன் தலைமையிலும், மங்கலம் பேட் பகுதியில் அய்யப்பன் தலைமையிலும், ஆரிய பாளையத்தில் கவுதம், முருகன் ஆகியோர் தலைமையிலும் தேனீ.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனீயார் பேரவை சார்பில் மங்கலம் தொகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு கேக் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை