மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதி - கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2018-2019) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bc-m-b-c-mw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து