மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் மாப்பேடு பகுதியில் வாசிப்பவர் பிரேம். இவர் கடந்த 20-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சென்ற போது மண்ணுர் கூட்டு சாலை அருகே மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பிரேமிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பிரேம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.

விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் தெரு வீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(வயது 28), அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(20), திருவள்ளூவர் தெருவை சேர்ந்த பிரவீன்(24), ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் பகுதியில் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்