மாவட்ட செய்திகள்

கோபியில் யாரும் வெளியில் தப்பித்து சென்றுவிடாதபடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தகரம் வைத்து அடைப்பு

கோபியில் தனிமைப்படுத்தப்பட்ட 8 பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கடத்தூர்,

கோபியில் வாய்க்கால் வீதி, வாய்க்கால் ரோடு, கருமாயா வீதி உள்பட 8 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதுமட்டுமின்றி வெளியில் இருந்து யாரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களை சந்திக்கவும் கூடாது எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட 8 பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையும் மீறி 2 பேர் வாய்க்கால் ரோடு பகுதியில் இருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தடுப்புகளை தாண்டி வெளியில் யாரும் எளிதில் தப்பி சென்றுவிடாதபடி தடுப்புகளில் தகரம் வைத்து போலீசார் அடைப்பு ஏற்படுத்திவிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து