மாவட்ட செய்திகள்

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்.

தினத்தந்தி

மீஞ்சூர்,

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றிய ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமை தாங்கி மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 375 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, மளிகை பொருட்களையும் அன்னதானத்தையும் வழங்கினார்.

இவ்விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன், சங்கீதா அன்பழகன், அன்பு, ரமேஷ், சகாதேவன், ராஜா, ரவி, காண்டீபன் கிருஷ்ணாபிரியா, அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து