மாவட்ட செய்திகள்

சிவகங்கை அருகே தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு; மாடு முட்டி போலீஸ் ஏட்டு படுகாயம் - 8 பேர் கைது

தடை உத்தரவை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மாடு முட்டியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த கீழக்கோட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலையில் தடை உத்தரவை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவதாக மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசு மற்றும் போலீஸ் ஏட்டு கனகராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த 30 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையில் அங்கு கட்டப்பட்டிருந்த மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அந்த மாடு போலீஸ் ஏட்டு கனகராஜை (வயது 37) முட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து கனகராஜை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராமன் (45), ரவி (24), பிரபு (20), பாலாஜி (19), விஜயகுமார் (20), ராஜ்குமார் (24), சிரஞ்சீவி (28) மற்றும் திவாகர் (21) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து