மாவட்ட செய்திகள்

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவானைக்காவல் வருகை கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளில் கலந்து கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று இரவு திருச்சி வந்தார்.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளில் கலந்து கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று இரவு திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி சமயபுரம் அருகே பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவானைக்காவல் கோவில் முன்பு நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சங்கரமடம் வாசலில் மடத்து சீடர்கள் மற்றும் வேதபாடசாலை மாணவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஒரு வாரம் தங்கி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருவானைக் காவல் சங்கர மடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள், தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் உலக நன்மைக்காக திரபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். அப்போது பக்தர்கள் நடத்தும் பாதபூஜையிலும் கலந்து கொள்கிறார். 9-ந் தேதி நடைபெறும் பரிவார மூர்த்திகள் யாகசாலை மற்றும் கும்பாபிஷேகம், 12-ந் தேதி நடைபெறும் பிரதான சன்னதிகள் யாகசாலை மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவற்றிலும் கலந்து கொள்கிறார். முகாம் நாட்களில் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து