மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்

காரியாபட்டி அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.

தினத்தந்தி

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தம்பதி மகேசுவரன்-மகேசுவரி. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது அந்த 3 பேருக்கும் 19 வயது. இதில் மகேசுவரனின் மகள்கள் பெயர் விஜயலட்சுமி, ராமலட்சுமி, மகன் பெயர் ராமகிருஷ்ணன் ஆகும். இவர்கள் 3 பேரும் நேற்று நடந்த காரியாபட்டி பேரூராட்சி தேர்தலில் முதன்முதலாக ஓட்டு போட்டனர். அதாவது, சின்னக்காரியாபட்டி அரசு ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர் மகிழ்ச்சி பொங்க வெளியே வந்த அவர்கள், இதுகுறித்து கூறுகையில், முதன்முதலில் தேர்தலில் ஓட்டுப்போட்டு இருக்கிறோம். 3 பேரும் ஒரே நேரத்தில் வந்து வாக்குகளை பதிவு செய்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி தொடர்ந்து எங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவாம் என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து