மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

எண்ணூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 7-வது பிளாக்கில் வசித்து வந்தவர் சுபாஷ் (வயது 20). ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிரவீன் (20), மீனவர் விக்கி (23). 3 பேரும் நண்பர்கள்.

நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் 3 பேரும் பாரிமுனை சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டி வந்தார். எண்ணூர் அருகே பாரத் நகர் ரவுண்டானா அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் அடியில் சிக்கி சுபாஷ், பீரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த விக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் அய்யப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை