மாவட்ட செய்திகள்

கட்டிட பணிகளுக்கு தண்ணீர் திருட்டு: 11 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு

கட்டிட பணிகளுக்கு தண்ணீர் திருடப்படுவதால், செட்டியக்காபாளையம் உள்பட 11 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது கிணத்துக்கடவு ஒன்றியம் செட்டியக்காபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு ஒன்றியம் தாமரைகுளம் அரசு ஆஸ்பத்திரி அருகில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து, 11 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து ஊராட்சிகளுக்கு குறிப்பாக கோவில்பாளையம், தாமரைகுளம், மாசநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லும் குழாய்களில் இருந்து தனியார் கட்டிட பணிகள் மேற்கொள்ள சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுகிறது.

இதனால் செட்டியக்காபாளையம் உள்பட 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆனைமலை அருகே உள்ள நெல்லிகுத்திபாறையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு விளம்பர பலகை வைத்திருந்தார். அதில் அவரது புகைப்படத்தை யாரோ கிழித்து விட்டனர். எனவே விளம்பர பலகையை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து