திண்டுக்கல்:
அண்ணா நினைவு தினம்
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையிலான தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவம், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாலகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பழனி
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனி மயில் ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி நிர்வாகி ரவிமனோகரன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, வேணுகோபாலு, முன்னாள் எம்.பி. குமாரசாமி, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் நகர தி.மு.க. சார்பில் பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலாளரும், நகரசபை முன்னாள் தலைவருமான முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், நகரசபை முன்னாள் துணைத்தலைவர் செல்லத்துரை ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகரசபை முன்னாள் தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் பிரபு, முன்னாள் அவைத் தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பிச்சை ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நகர ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் நகர செயலாளர் தாவுது, நிர்வாகி திரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.