மைசூரு,
நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்த யானைகளின் கஜபயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 19-ந்தேதி விஜயதசமி அன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.