மாவட்ட செய்திகள்

மதுபாட்டில்கள் விற்று தீர்ந்ததால் பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் சென்ற மது பிரியர்கள்

கும்மிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலேயே மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தன. இருப்பு இல்லாததால் மதுபிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட், தண்டலச்சேரி, ரெட்டம்பேடு உள்ளிட்ட பல்வேறு மதுக்கடைகளில் நேற்று காலையிலேயே மதுபாட்டில்கள் முழுமையாக விற்று தீர்ந்தன.

இந்த நிலையில் பெரும்பாலான கடைகள் நேற்று மதியமே மூடப்பட்டன. இருப்பினும் மதுபாட்டில்கள் கடைகளுக்கு வந்து சேரும் வரை மதுபிரியர்கள் கடை வாசலில் பல மணி நேரமாக காத்திருந்தனர். மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு நேற்று இரவு 7 மணியளவில் மதுபாட்டில்கள் வேன்களில் வந்து சேர்ந்தன.

இதனையடுத்து மதுக்கடைகளின் வாசலில் காத்திருந்த மதுப்பிரியர்கள் உற்சாகமாக தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

முழு ஊரடங்கு

மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மதுக்கடைகள் எந்த பகுதியில் எப்போது வரை திறந்து இருக்கும் என்பது தெரியாத குழப்பத்தில் துணிப்பை, கோணிப்பை போன்றவற்றில் அதிக அளவு மதுபாட்டில்களை பெரும்பாலானவர்கள் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை