மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்தநாளை கொண்டாடததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூருவில் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு கனகபுரா ரோடு கிரிகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டா. இவரது மனைவி தேஜஸ்வினி (வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் தேஜஸ்வினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில், கடந்த 6-ந் தேதி இந்த தம்பதியின் ஆண் குழந்தைக்கு 2-வது பிறந்தநாள் விழா ஆகும். தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கணவரிடம் தேஜஸ்வினி கூறியுள்ளார். ஆனால் கோழி பண்ணை வைத்து நடத்தியதில் ஸ்ரீகண்டாவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்ததால், அவருக்கு குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட விருப்பம் இல்லாமல் மைசூருவுக்கு சென்றிருந்தார்.

இதனால் மனம் உடைந்த தேஜஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்