மாவட்ட செய்திகள்

பெல் நிறுவனத்தில் வேலை

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தினத்தந்தி

பெங்களூருவில் உள்ள பெல் கிளைக்கு புராஜெக்ட் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் உள்ளன.

புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 இடங்களும், சூப்பிரவைசர் பணிக்கு 34 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 21-7-2018-ந் தேதியாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் 26-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கவும் www.bheledn.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து