மாவட்ட செய்திகள்

நகை பறித்த வாலிபர் கைது

நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாட்டவயல் அருகே உள்ள வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ராஜன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரித்தா. சம்பவத்தன்று ராஜன் வெளியூர் சென்று இருந்தார்.

இதனால் கடையில் பிரித்தா மட்டும் இருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமி பொருட்கள் வாங்குவது போல நடித்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அம்பலமூலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டது, பந்தகாப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவ்(வயது 32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை