செய்திகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்பட்டது. மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச்சென்றனர்.

தினத்தந்தி

சென்னை,

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் ஆகியவை நேற்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது. அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு மணி நேரத்துக்கு தலா 20 மாணவர்கள் வீதம் பள்ளிக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை ஆசிரியர்கள் வழங்கினர்.

முககவசம் அணியாதவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கைகளில் கிருமிநாசினி திரவமும் தெளிக்கப்பட்டது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்ய, மதிப்பெண் சான்றிதழ் பெற வந்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் தனித்தனியாக சமூக இடைவெளி உடன் அமர வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வதற்கும், மதிப்பெண் பட்டியல் வாங்குவதற்கும் வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை