செய்திகள்

புதுவையில் கடும் பனி மூட்டம்

புதுவையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

தினத்தந்தி

பாகூர்,

பொதுவாக மார்கழி மாதத்தில் பனி மூட்டம் இருப்பது வழக்கம். இந்தஆண்டு கார்த்திகைமாதத்தின்கடைசியில் இருந்தே பனி மூட்டம் காணப்பட்டது. தற்போது மார்கழி மாதத்தில் பனி மூட்டம் அதிக அளவு காணப்படுகிறது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு 12 மணி முதல் கடும் பனி மூட்டம் இருந்து வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இது காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளைஒளிரவிட்டு செல்கின்றன.

இதேபோன்ற நிலைதான் புதுச்சேரி மாநிலம் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை என பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

இதனால் ஏற்படும் கடும் குளிரால் முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகாலையில் நடை பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

காரணம் என்ன?

பனி மூட்டம் அதிகமாக இருந்ததற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

சாதாரண சூழ்நிலையில் வெப்பநிலை கீழ் இருந்து மேலே செல்லும்போது குறையும். தற்போது வெப்பநிலை முரண் (டெம்பரேச்சர் இன்வெர்ஷன்) ஏற்பட்டு கீழ் இருந்து மேலே செல்லும்போது வெப்பநிலை அதிகமாகி உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை இந்த சூழ்நிலை நிலவும். அதனால் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.

சூரிய வெளிச்சம் நிலத்தில் படத்தொடங்கியதும், மீண்டும் பழைய சூழ்நிலைக்கு வந்துவிடும். குளிர்காலத்தில் இது ஏற்படுவது வழக்கம். இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலை இருக்கும். வருகிற 8-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று நமக்கு குறைவதால் அந்த நேரத்தில் பனிமூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வருகிற 15-ந் தேதி வரை அந்த நிலை நீடிக்கும்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. உள் தமிழகம் முதல் உள் கர்நாடகா பகுதி வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

வருகிற 8-ந் தேதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிவரும் பட்சத்தில், வட கிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கருதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை