செய்திகள்

வளைகுடாவில் சிறை வைக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் விடுதலை

வளைகுடாவில் சிறை வைக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் விடுதலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மனாமா,

வளைகுடா நாடான பஹ்ரைனில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வந்தவர் மனித உரிமை ஆர்வலர் நபீல் ரஜாப் (வயது 55). இவர் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார். மனித உரிமை குழுக்கள், நபீல் ரஜாப் நடத்தப்படும் விதத்துக்கு கண்டனம் தெரிவித்தன. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. குழு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் எஞ்சிய தண்டனை காலத்தை காவலில் வைக்காத அமைப்பில் கழிப்பார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் 2018-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக்காலத்தை காவல் அற்ற அமைப்பில் கழிக்க வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரபலம், நபீல் ரஜாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அங்கு 2011-ல் நடந்த ஜனநாயக சார்பு எழுச்சி போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்