சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் நல்லாப்பிள்ளை(வயது 40). இவர் நேற்று காலை கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நல்லாப்பிள்ளை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நல்லாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த அரியலூர் திருக்கை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் முரளி(27). சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த முரளி, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அன்னியூரில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். அத்தியூர் திருக்கை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று முரளி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.