வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உத்தரவின்பேரில் கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பி சாஸ்திரி, வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் ஆகியோர் தலைமையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப்குமார், கஜேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.