செய்திகள்

தேனியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் தேனி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தேனி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. எனவே, அனைவருக்கும் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் விண்ணப்பித்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள், தங்களது கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது