தேசிய செய்திகள்

புல்வமா மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். காஷ்மீரைசேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்த உள்ளூர் இளைஞர்கள் மூன்று பேர் நேற்று மாலை அங்குள்ள ககபோரா பகுதியில் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து கொண்ட மூன்று பயங்கரவாதிகளும் அங்கிருந்து கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இறுதியில் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த மூன்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் வெடிபொருடகளும் கைப்பற்றப்பட்டன. கடந்த மூன்று தினங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது வெற்றிகரமான என்கவுண்டர் இதுவாகும்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது