தேசிய செய்திகள்

கஜகஸ்தான் நாட்டில் இருந்து 56 லட்சம் சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு

கஜகஸ்தான் நாட்டில் இருந்து ரெஸ்பிரேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில் இருந்து, இன்று அதிகாலை விமானம் மூலமாக 56 லட்சம் ரெஸ்பிரேட்டர் எனப்படும் சுவாசக்கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உதவியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை