தேசிய செய்திகள்

முன் ஜாமீன் கோரி நேரடியாக ஐகோர்ட்டை நாட முடியுமா? உச்ச நீதிமன்றம் விசாரணை

வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரளாவில் 2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை மாநில ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் 2 பேரும் முதலில் செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யாமல் நேரடியாக ஐகோர்ட்டை நாடியதும், இவ்வாறு நேரடியாக தாக்கல் செய்யப்படும் முன் ஜாமீன் மனுக்களை விசாரிப்பதை கேரள ஐகோர்ட்டு வழக்கமான நடைமுறையாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கேரள ஐகோர்ட்டு நேரடி முன் ஜாமீன் மனுக்களை அதிகம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு தெரிவித்து உள்ளது.எனவே முன் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனுதாரரின் முடிவா? அல்லது முதலில் செசன்ஸ் கோர்ட்டை நாட வேண்டியது கட்டாயமா? என்பதை விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவுவதற்கு மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ராவை நியமித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து