தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் குழந்தைகள் விற்பனை: பெண் டாக்டர் கைது

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஹாலியாவில் உள்ள நிர்மலா ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் சாந்தி பிரியா.

தினத்தந்தி

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஹாலியாவில் உள்ள நிர்மலா ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் சாந்தி பிரியா. அந்த ஆஸ்பத்திரியில் ஒரு தம்பதிக்கு 5வதாக பிறந்த பெண் குழந்தையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு பேரம் பேசி விற்று உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய தம்பதியையும், இடைத்தரகராக செயல்பட்ட டாக்டர் சாந்தி பிரியாவையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதேபோன்று ரூ.4.5 லட்சத்துக்கு மேலும் ஒரு குழந்தையை விற்றதிலும் டாக்டர் சாந்தி பிரியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து