ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது மனைவிக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், அவருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தானும் தனிமைப்படுத்திக் கொண்டு, தினமும் டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதாகவும் கூறி உள்ளார்.