தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் படிக்காதவர்கள் அல்ல, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் - ராஜ்நாத் சிங் பேச்சு

பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குருஷேத்ரா,

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

அந்த ஆர்வத்தை வைத்து இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்களில் இணைத்து விடுகின்றனர். படித்தவர்கள் என்பதால் தான் அவர்கள் கொல்லும் மக்களின் அளவும் மாறுபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு