தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், இன்று 15 ரயில்கள் தாமதம் ஆகின.

புதுடெல்லி,

வடமாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை டெல்லி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் ரெயில்கள் தவித்தன. அந்த அளவிற்கு பனி மூட்டம் நிலவியது.

அதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 15 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. பனி மூட்டத்துடன் காற்றும் மோசம் அடைந்துள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு