தேசிய செய்திகள்

டெல்லி பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்- போலீசார் கைது

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து டெல்லி பாஜக அலுவலகம் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

புதுடெல்லி,

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு