தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பதவி விலகினார் ஆதேஷ் குப்தா..!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆதேஷ் குப்தா பதவி விலகினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. டெல்லி மாநகராட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றுள்ளது.

இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். ஆதேஷ் குப்தாவின் ராஜினாமாவிற்கு ஒப்புதல் பாஜக தலைமை அளித்துள்ளது. மேலும் துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்