தேசிய செய்திகள்

சுய ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அறிவுரை

சுய ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு, பூக்கள் கொடுத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். கொரேனா வைரசில் இருந்து நாட்டைக் காப்பதற்கான முயற்சியின் சோதனையாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில்கள், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. எனினும், சில இடங்களில் மக்கள், சுய ஊரடங்கை மீறி வெளியில் வருவதைக் காண முடிகிறது. டெல்லியில் இவ்வாறு, வெளி வந்த மக்களுக்கு, ரோஜாப்பூ கொடுத்த போலீசார், மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்