தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வேறு பெயர் மாற்றம்: புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வைகை, பொதிகை என பெயர் மாற்றம் செய்ததில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு இல்லம் அமைப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் அங்கு தமிழ்நாடு இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு புதிய பெயர் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. அதில், பழைய இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம்; என்றும் புதிய இல்லத்துக்கு பொதிகை தமிழ் இல்லம் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு மீண்டும் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இனி, வைகை - தமிழ்நாடு இல்லம், பொதிகை - தமிழ்நாடு இல்லம் என அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகம் கோரிக்கை வைத்ததால் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு