தேசிய செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

போர்ட் பிளேர்,

அந்தமான் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

80 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 12.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT