தேசிய செய்திகள்

பணம் இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே அணி செயல்பாடாது - உத்தவ் தாக்கரே

தினத்தந்தி

உடைந்த சிவசேனா

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி கவிழ்த்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் கைகோர்த்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதிருப்தி அணிக்கு தலைமையேற்ற ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.

இந்தநிலையில் உடைபட்ட சிவசேனாவை சீரமைக்க முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், முன்னாள் மந்திரியும் போராடி வருகின்றனர்.

இதற்கிடையே சிவசேனா தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மக்கள் கத்திருப்பு

மக்கள் துரோகிகளுககு பாடம் புகட்டுவதற்காக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை.

அதிருப்தி அணியால் பணப்பெட்டி இல்லாமல் செயல்பட முடியாது. எங்களிடமும் பெட்டிகள் உள்ளன. ஆனால் அது முழுவதும் நேர்மையான சிவசேனாவினராலும், விசுவாசமான தொண்டர்களாலும் நிறைந்துள்ளது.

சிவசேனா தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்கில் நீதிபதிகள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் நீதித்துறையை முழுமையாக மதிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் கட்சி தொடர்பான பிற சிக்கல்கள் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து