கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

எர்ணாகுளம்-பெங்களூரு இடையே கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக புதிய வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எர்ணாகுளம்-பெங்களூரு உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவை நாளை (சனிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட உள்ளது.

புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 12 பெட்டிகளை கொண்டது. எர்ணாகுளம்-பெங்களூரு இடையே இந்த புதிய வந்தே பாரத் ரெயில்களை சேர்த்து 3-வது ரெயிலாக இயக்கப்பட உள்ளது. ஆனால், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முதல் ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து