தேசிய செய்திகள்

கேரளா வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா:

கேரள மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

தற்போது மழை ஓய்ந்தநிலையில், கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவிகளை கேரள அரசு செய்து வருகிறது. 1243 அரசு முகாம்களில் 2,24,506 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு