தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு

அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

வங்காள விரிகுடா கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை கொண்டது அந்தமான் நிகோபார். சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் அந்தமான்- நிகோபருக்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டும் என்றால் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

இந்த கட்டுப்பாட்டை தற்போது உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது.

முன்னதாக மனிதர்கள் வாழக்கூடிய 29 தீவுகளுக்கும், மனிதர்கள் வாழாத 11 தீவுகளுக்கும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த இடங்களுக்கெல்லாம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்