கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கடத்தப்பட்ட சிறுமியை 1 மணி நேரத்தில் மிட்ட போலீசார்

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை மீட்டு ஒரு மணி நேரத்தில் 27 வயது இளைஞரை கைது செய்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது சிறுமி ஒருவர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் சிறுமியை கடத்தியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை தெரியாத இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை மீட்டு ஒரு மணி நேரத்தில் 27 வயது இளைஞனை கைது செய்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் சிறுமியை கடத்தியவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோதிகர்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்குமார் வர்மா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை